டிராக்டர் கிராமபுற இளைஞர்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் டிராக்டர் ஓட்ட பயிற்சி, வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கல் உள்ளிட்ட பயிற்சியை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் வேளாண் இயந்திரங்களுக்கான பயிற்றுநர் பயிற்சி மற்றும் டிராக்டர், அறுவடை டிராக்டர்களை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓராண்டு அனுபவம் அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.), பட்டயப்படிப்பு (டிப்ளமோ) ஆகிய ஒன்றுடன் 6 மாத அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பயிற்சிக் காலம் மொத்தம் 22 வேலை நாள்களாகும். வயது 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தங்கும் வசதி கிடையாது.
டிராக்டர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரட்டைக் கட்டுப்பாட்டு வசதி கொண்ட டிராக்டர்(Dual Control Tractor) மற்றும் அதன் வெட்டுத் தோட்ட மாதிரி (Tractor Cut Section Model), பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள பணிமனையில் டிராக்டர் ஓட்டுவதற்கான பாவனை பயிற்சி சாதனமும் (Tractor Simulator) நிறுவப்பட்டுள்ளது. அதேபோல வேளாண் பொறியியல் துறையின் கீழ் இருக்கும் பணிமனைகளில் பயிற்சி வழங்கப்படும்.
டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி (Tractor Operator), வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை பழுது பார்ப்பதற்கான பயிற்சிகளில் சேர விரும்புவோர் மேற்காணும் QR Code-ஐ ஸ்கேன் செய்து பெயர், மாவட்டம், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு aedcewrm@gmail.com, aedcesolar@gmail.com ஆகிய மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச டிராக்டர் பயிற்சி வேளாண்மைப் பொறியியல் பயிற்சிகள்
இதேபோல் படித்த இளைஞர்கள் வேளாண்துறையின் பக்கம் திரும்புவதை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண்மை பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி தரப்படுகிறது.
கல்லூரியில் பயின்ற மற்றும் பயிலும் வேளாண்மையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பினை பெறலாம்.
வேளாண் பயிற்சி இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் 500 இளைஞர்களுக்கு 5 நாள்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் பயிற்சி தரப்படும்.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள மேலேயுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.