HomeBlogஆதாரை இணைக்காவிட்டால் விவசாயிகளுக்கு ரூ.6,000 கிடைக்காது
- Advertisment -

ஆதாரை இணைக்காவிட்டால் விவசாயிகளுக்கு ரூ.6,000 கிடைக்காது

AVvXsEgPwGSb7Ch9ERya2QkMD3dKXJ3rWH c7kXqlnDUHBAuCFzHQL8mqoabaEu JpijKzjHivFxZEOMlcfO1TJMVdFQLs8wHyBw94D12sZGBNzRTCzJq9 tymXaVa7rPQ5DuLAhfAdYFi9Hsugee8Jc44MD2QtdfWKX5 WVVIuNoBwzzghag2DEWgcEtYIo6w Tamil Mixer Education

ஆதாரை இணைக்காவிட்டால் விவசாயிகளுக்கு ரூ.6,000
கிடைக்காது

பிரதமர்
கிசான் சம்மான் என்பது
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இது டிசம்பர் 1, 2018 முதல்
அமலுக்கு வந்தது.

இதன்
கீழ், விவசாயிகளுக்கு தலா
ரு.2,000 என மூன்று
தவணைகளில் ஆண்டுக்கு ரூ
6,000
கிடைக்கிறது.

இதுவரை
9
தவணைகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும்
10
வது தவணையை விவசாயிகளின் கணக்கில் அரசு விரைவில்
மாற்ற உள்ளது. அடுத்த
தவணை, டிச.,15ல்,
விவசாயிகளின் கணக்கில்
வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், இதுவரை, மொத்தம்,
11.37
கோடி விவசாயிகளுக்கு, அரசு,
1.58
லட்சம் கோடி ரூபாயை
வழங்கி உள்ளது.

பிரதான்
மந்திரி கிசான் சம்மன்
நிதி யோஜனா திட்டத்தில் பல மோசடிகள் பதிவாகி
வருகின்றன. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, பதிவு செய்யும்
முறையை மோடி அரசு
மாற்றியுள்ளது.

அந்த
வகையில் தற்போது, ​​​​நீங்கள்
மோசடிக்கு ஆளாகாமல் இருக்க
சில மாற்றங்களை செய்ய
வேண்டும். இந்த திட்டத்தின் பலன்களை பெற, விவசாயிகள் தங்களது பி.எம்
கிசான் ணக்கை ஆதார்
அட்டையுடன் இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பணத்தை
பெறுவதற்கு இது மிக
முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
தவறான ஆதார் விவரங்கள்
வழங்கப்பட்டால், இத்திட்டத்தின் பயனை விவசாயிகள் பெற
முடியாது.

ஆதார்
அட்டையின் முக்கியத்துவத்தை கருத்தில்
கொண்டு, பிஎம்கிசான் கணக்குடன்
ஒரு விவசாயி அதை
இணைப்பது அவசியம். அப்போதுதான், இத்திட்டத்தின் பயனாக
விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000
பெற முடியும்.

PM கிசான் கணக்குடன் உங்கள் ஆதாரை எவ்வாறு இணைப்பது.?

  • உங்கள் ஆதார்
    அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக்
    கிளைக்குச் செல்லவும்
  • வங்கி அதிகாரி
    முன்னிலையில் ஆதார்
    அட்டையின் புகைப்பட நகலில்
    உங்கள் கையொப்பமிட வேண்டும்..
    ஆனால் உங்கள் அசல்
    ஆதார் அட்டையை எடுத்து
    செல்லாமல் இருப்பது நல்லது..
  • உங்கள் ஆதார்
    சரிபார்க்கப்பட்ட பிறகு
    உங்கள் வங்கியால் ஆன்லைனில்
    ஆதார் எண் இணைக்கப்படும்..
  • இதற்குப் பிறகு
    உங்கள் கணக்கில் 12 இலக்க
    ஆதார் எண் நிரப்பப்படும்
  • சரிபார்ப்புக்குப் பிறகு,
    அதை உறுதிப்படுத்தும் SMS உங்களுக்கு வரும்

ஆன்லைனில் நீங்களே எப்படி ஆதார் அட்டையை இணைப்பது..?

  • பிஎம் கிசானின்
    இணையதளமான pmkisan.gov.in இல்
    உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • ஆதாரை இணைக்க,
    நீங்கள் ஃபார்மர் கார்னர்
    என்ற விருப்பத்திற்குச் சென்று,
    ஆதார் விவரங்களைத் திருத்து
    என்ற விருப்பத்தை கிளிக்
    செய்து புதுப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -