TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
தோட்டக்கலைத்துறையில்
மானிய
திட்டங்கள்
பயன்பெற
விவசாயிகளுக்கு
அழைப்பு
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய விவசாயிகள், மானியத்திட்டங்களை
பயன்படுத்திக்கொள்ள,
தோட்டக்கலைத்துறை
அதிகாரிகள்
அழைப்பு
விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கூறியதாவது:
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில்,
கலைஞரின்
அனைத்து
கிராம
வேளாண்
வளர்ச்சி
திட்டத்தில்,
ராசக்காபாளையம்,
காவிலிபாளையம்,
புளியம்பட்டி,
குள்ளக்காபாளையம்,
ஒக்கிலிபாளையம்,
ஆவலப்பம்பட்டி,
பூசாரிபட்டி,
தேவம்பாடி,
நல்லுாத்துக்குளி
மற்றும்
கிட்டசூரம்பாளையம்
ஆகிய
கிராமங்கள்
தேர்வு
செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத்துறையின்
மானியத்திட்டத்தில்,
80 சதவீதம்
இந்த
கிராமங்களிலும்,
20 சதவீதம்
மற்ற
கிராமங்களிலும்
செயல்படுத்தப்படுகிறது.
இந்த
பருவத்துக்கு
பல
மானிய
திட்டங்கள்
அறிவிக்கப்பட்டு
உள்ளன.காய்கறி சாகுபடிக்கு ஒரு ஹெக்டருக்கு, 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது;
63 ஹெக்டர்
இலக்கு
பெறப்பட்டுள்ளது.
பப்பாளி சாகுபடிக்கு ஹெக்டருக்கு, 23 ஆயிரம் மானியம், மூன்று ஹெக்டர் இலக்கு. அடர் கொய்யா நடவுக்கு ஹெக்டருக்கு, 17 ஆயிரம் மானியம் இரண்டு ஹெக்டர் இலக்கு. மிளகு சாகுபடிக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் மானியம், இரண்டு ஹெக்டர் இலக்கு பெறப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்துக்கு
ஹெக்டருக்கு,
நான்காயிரம்
ரூபாயில்
இடுபொருட்கள்
வழங்கப்படுகிறது;
ஒன்பது
ஹெக்டர்
இலக்கு.அயல் மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூலை பெருக்கவும், கூடுதல் வருமானத்துக்கும்,
50 யூனிட்
தேனீப்பெட்டிகள்
இலக்கு
பெறப்பட்டுள்ளது.
ஒரு
யூனிட்டில்,
பத்து
தேனீப்பெட்டிகள்
இருக்கும்.
40 சதவீதம்
அரசு
மானியமாக
ஒரு
யூனிட்டுக்கு,
9,600 ரூபாய்
வழங்கப்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்க, தென்னைக்கு மத்தியில் வாழை சாகுபடிக்கு ஹெக்டருக்கு, 26,250 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது;
30 ஹெக்டர்
இலக்கு
பெறப்பட்டுள்ளது.வாழைக்கு மத்தியில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம், 10 ஹெக்டருக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.
இந்த மானிய திட்டங்களில்
பயன்பெற
விவசாயிகள்,
https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/
என்ற
இணையதளம்
அல்லது
மீன்கரை
ரோட்டிலுள்ள
தோட்டக்கலைத்துறை
அலுவலகத்தில்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.