HomeBlogவிவசாயிகள் மானியத்தில் மோட்டார் பம்பு செட்டு பெறலாம்
- Advertisment -

விவசாயிகள் மானியத்தில் மோட்டார் பம்பு செட்டு பெறலாம்

Farmers can get motor pump set in subsidy

விவசாயிகள் மானியத்தில் மோட்டார் பம்பு
செட்டு பெறலாம்  

மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார்
பம்ப்செட்டுகள் பெறுவதற்கு மூன்று ஏக்கர் வரை
நிலம் சொந்தமாக வைத்திருக்கும் சிறு மற்றும் குறு
விவசாயிகளுக்கு பழைய
திறனற்ற மின்மோட்டார் பம்ப்செட்
மாற்றுவதற்கும் அல்லது
புதியமின் மோட்டார்பம்ப்செட் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 HP வரை) மாநிலநிதி
ஒதுக்கீட்டின் கீழ்
இத்திட்டம் 2021-2022ம்
ஆண்டில் விவசாயிகள்; பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 17 எண்களுக்கு 1.7 இலட்சம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவிவசாயிகள் சிட்டா
அடங்கல்,சிறு மற்றும்
குறு விவசாயிக்கான வட்டாட்சியர் சான்று,மின் இணைப்புசான்றின் நகல்,வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க ஒளிமநகல்
ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட உதவிசெயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல்
துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கக்கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மானியத்துடன் கூடிய மின்சாரமோட்டார் பம்ப்செட்
வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள்(நெல் பயிரிடும்
விவசாயிகள் தவிர) நுண்ணீர்
பாசன மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்து நுண்ணீர்
பாசன முறையில் பாசனம்
செய்ய வேண்டும்.

மேலும்
இத்திட்டம் தொடர்பான முழு
விவரங்களைப் பெற்றிட ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம்,
செந்துறை பகுதிகளை சார்ந்த
விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை
வெள்ளைப்பிள்ளையார் கோவில்
தெரு பரணம் ரோடு,
உடையார்பாளையம் மற்றும்
அரியலூர்,திருமானுர் பகுதிகளை
சார்ந்த விவசாயிகள் உதவி
செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை அறை.எண்.26,
பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் மெயின் ரோடு. அரியலூர்
அலுவலகங்களை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -