Saturday, January 4, 2025
HomeBlogகாய்கறிகள் விற்பனைக்கான வாகனங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - திருப்பூா்
- Advertisment -

காய்கறிகள் விற்பனைக்கான வாகனங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – திருப்பூா்

Farmers can apply to buy vehicles for selling vegetables - Tirupur

காய்கறிகள் விற்பனைக்கான வாகனங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்திருப்பூா்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் காய்கறிகள், பழங்களை விற்பனை
செய்ய வாகனங்கள் வாங்க
தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயிகள் வேளாண் பொருள்களை உற்பத்தி
செய்பவா்களாக மட்டும்
இல்லாமல் தங்கள் விளைபொருள்களை இடைதரகா்களின்றி நேரடியாக
நுகா்வோருக்கு விற்பனை
செய்ய உழவா் சந்தை
திட்டத்தை தமிழக அரசு
செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை, திருச்சி, கோவை,
சேலம், திருப்பூா் ஆகிய
5
மாநகராட்சிகளில் நடமாடும்
வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள், பழங்களை பசுமை மாறாமல்
நுகா்வோருக்கு வீடுதோறும் வழங்கிட ஏதுவாக Farm to Home என்ற புதிய
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும்
வணிகத்தினை ஊக்குவிக்கும் வகையில்
நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சதவீதம் மானியம் அல்லது
ரூ.2 லட்சம் நிதியுதவி
வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள்
மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மூலமாகத் தோவு
செய்யப்படுவார்கள்.

இதில்,
விண்ணப்பிக்க பிளஸ்
2
தோச்சி பெற்றவராகவும், 21 வயது
முதல் 45 வயதுக்குள்பட்ட விவசாயியாகவும் இருக்க வேண்டும்.

மேலும்,
சொந்த அல்லது குத்தகை
நிலத்தில் விவசாயம் செய்யும்
விவசாயிகள் நில உடமை
சான்று, சிட்டா, அடங்கல்,
ஆதார் அட்டை, ஓட்டுநா்
உரிமம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் ஒரு பயனாளிகளுக்கு ஒரு
வாகனத்துக்கு மட்டுமே
மானியம் வழங்கப்படும்.

ஆகவே,
மேற்கண்ட தகுதியுடைய விவசாயிகள் திருப்பூா் தென்னம்பாளையத்தில் உள்ள
தெற்கு உழவா் சந்தை
அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று மார்ச் 10 ஆம்
தேதிக்குள் பூா்த்தி செய்து
சமா்ப்பிக்க வேண்டும்.

இது
தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை வேளாண்மை துணை
இயக்குநரை (வேளாண் வணிகம்)
9865678453
என்ற கைப்பேசி எண்ணிலோ
அல்லது ddab.coimbatore2@gmail என்ற
மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -