காய்கறிகள் விற்பனைக்கான வாகனங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – கோவை
நுகர்வோருக்கு காய்கறி, பழங்களை நேரடியாக
விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் வாகனம் வாங்குவதற்கு, 40 சதவீதம் அரசு மானியம்
வழங்கப்படுகிறது.
கோவை கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:
கொரோனா
ஊரடங்கு காலத்தில் நடமாடும்
வாகனங்கள் மூலம் காய்கறி,
பழங்கள் நேரடியாக நுகர்வோர்
வீட்டுக்கே விற்பனை செய்யப்பட்டது.
இதன்
அடுத்த கட்டமாக, கோவை
உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நடமாடும்
வாகனங்கள் மூலம் காய்கறி,
பழங்களை விற்பனை செய்ய
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘பார்ம்
டூ ஹோம்‘ என்ற
இந்த புதிய திட்டப்படி, கிராமப்புற விவசாயிகள், இளைஞர்கள்
வணிகம் செய்ய ஊக்குவிக்கப்படுவர்.அவர்கள் வாகனங்கள்
வாங்குவதற்கு 40 சதவீதம்
மானியம் அல்லது 2 லட்சம்
ரூபாய் நிதியுதவி அரசால்
வழங்கப்படும்.
கோவை
மாநகராட்சியில் 6 வாகனங்கள்
மூலம் 100 வார்டுகளுக்கும் காய்கறி,
பழங்கள் விற்பனை செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.உழவர்
சந்தை விலை அடிப்படையில், காய்கறி விற்பனை செய்யப்படும். வாகனங்கள் வாங்க மானியம்
பெற, 12ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். 21 முதல் 45 வயதுடைய,
சொந்த/குத்தகை நிலத்தில்
விவசாயம் செய்வோர், உரிய
சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு, 98656 78453 என்ற
எண்ணில் மாவட்ட வேளாண்
துணை இயக்குனரை (வேளாண்
வணிகம்) தொடர்பு கொள்ளலாம்.