HomeBlogசதவீதம் மானியத்தில் கால்நடை வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு
- Advertisment -

சதவீதம் மானியத்தில் கால்நடை வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு

Farmers are invited to raise cattle on percentage subsidy

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

சதவீதம் மானியத்தில் கால்நடை வளர்க்க விவசாயிகளுக்கு
அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில்,
பாரத
பிரதமரின்
தேசிய
கால்நடை
இயக்க
திட்டத்தில்,
கோழிகள்,
ஆடுகள்
மற்றும்
பன்றிகள்
வளர்த்து
தொழில்
முனைவோராக
விவசாயிகளை
உருவாக்குவதற்கு,
தேர்வு
செய்யப்படும்
நபர்களுக்கு,
வங்கிகளில்
மானியத்துடன்,
அதிக
பட்சமாக
50
லட்சம்
ரூபாய்
வரை
மத்திய
அரசு
கடன்
வழங்க
திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தில்
பயன்பெற
விரும்பும்
விவசாயிகள்,
ONLINE
வாயிலாக
விண்ணப்பிக்க
வேண்டும்
என,
மாவட்ட
கால்நடை
துறையினர்
அறிவுறுத்தியுள்ளனர்.

பாரத பிரதமரின் தேசிய கால்நடை இயக்கத்தின்கீழ்
புறக்கடை
கோழி
வளர்ப்பு,
செம்மறியாடு
வளர்ப்பு,
வெள்ளாடு
வளர்ப்பு,
பன்றி
வளர்ப்பு,
தீவனம்
மற்றும்
தீவனப்
பயிர்
சேமிப்பு
மற்றும்
மேம்படுத்துதல்
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை
மேம்படுத்துதல்
மற்றும்
தீவன
உற்பத்தி
ஆகிய
பணிகளை
மேற்கொள்ள,
தொழில்
முனைவோரை
உருவாக்க
திட்டம்
தயாரித்து
செயல்படுத்தப்பட
உள்ளது.

இத்திட்டத்தின்
கீழ்,
1,000
நாட்டு
கோழிகள்
உடைய
பண்ணை
அமைத்து,
முட்டை
உற்பத்தி
செய்து,
கோழி
குஞ்சு
பொரிப்பகம்
வாயிலாக
கோழிக்குஞ்சுகள்
உற்பத்தி
செய்து,
நான்கு
வார
வயது
வரை
வளர்த்து
விற்க
மொத்த
திட்ட
செலவில்,
மூலதனத்தில்,
50
சதவீதம்
மானியம்
வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக,
25
லட்சம்
ரூபாய்
வரை
மானியம்
வழங்கப்படும்.

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு,
500
பெண்
ஆடுகள்
மற்றும்
25
கிடா
கொண்ட
அலகுகள்
அமைக்க,
மொத்த
திட்ட
செலவில்,
மூலதனத்தில்
50
சதவீதம்
மானியம்
வழங்கப்படும்.
அதிகபட்சமாக,
50
லட்சம்
ரூபாய்
மானியமாக
இரண்டு
தவணைகளில்
பெறலாம்.

அதேபோல் பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு,
100
பெண்
பன்றிகள்,
25
ஆண்
பன்றிகள்
உடைய
அலகுகள்
அமைக்க,
மொத்த
திட்ட
செலவில்,
மூலதனத்தில்,
50
சதவீதம்
மானியத்தில்
அதிகபட்சமாக,
30
லட்சம்
ரூபாய்
வரை
மானியம்
வழங்கப்பட
உள்ளது.

மேலும், தீவனம் மற்றும் தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புக்காக
ஓராண்டில்
20
லட்சம்
கிலோ
முதல்
24
லட்சம்
கிலோ
வரை,
வைக்கோல்,
ஊறுகாய்
புல்,
ஒரு
நாளில்
30
ஆயிரம்
மொத்த
கலப்பு
தீவனம்,
தீவன
கட்டி
தயாரித்தல்
மற்றும்
சேமித்தல்
பணிகளை
மேற்கொள்ளும்
முனைவோருக்கு
தளவாடங்கள்
வாங்க
மொத்த
திட்ட
செலவில்,
மூலதனத்தில்,
50
சதவீதம்
மானியத்தில்
அதிகபட்சமாக,
50
லட்சம்
ரூபாய்
வரை
மானியம்
வழங்கப்படும்.

தனி நபர், சுய உதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள்
அமைப்பு,
விவசாய
கூட்டுறவுகள்,
கூட்டு
பொறுப்பு
சங்கங்கள்
பிரிவு,
எட்டு
நிறுவனங்கள்
தகுதியானவர்கள்
ஆவர்.
முனைவோர்
சொந்தமாக
நிலம்
இருக்க
வேண்டும்
அல்லது
குத்தகைக்கு
எடுக்கப்பட்ட
நிலம்
வைத்திருக்க
வேண்டும்.
தொழில்முனைவோர்,
தகுதியான
நிறுவனங்கள்
இந்த
திட்டத்தின்
மூலம்
வங்கி
கடன்
அனுமதி
அல்லது
வங்கி
உத்தரவாதம்
பெற
வேண்டும்,
திட்ட
மதிப்பீட்டிற்கான
அங்கீகாரத்தையும்
பெற்றிருக்க
வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட
திட்டங்கள்
மூலம்
பயன்பெற
விரும்பும்
விவசாயிகள்
மற்றும்
சங்கத்தினர் https://nlm.udyamimitra.in/ என்ற இணைய தளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை
பதிவேற்றம்
செய்ய
வேண்டும்.ந்த விண்ணப்பங்கள்
தமிழ்நாடு
கால்நடை
மேம்
பாட்டு
முகமையின்
திட்ட
மதிப்பீட்டு
குழுவால்
பரிசீலித்து
கடன்
வசதி
பெறுவதற்கு
அந்தந்த
வங்கிகளுக்கு
பரிந்துரை
கடிதம்
அனுப்பி
வைக்கப்படும்.
திருவள்ளூர்
மாவட்டத்தில்
மொத்தம்,
50
பயனாளிகள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்
என்பது
குறிப்பிட
தக்கது.

பின்னர், மத்திய அரசின் அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள்
அனுப்பி
பணிகள்
நிறைவு
பெறுவதன்
அடிப்படையில்,
மானியம்
இரு
தவணைகளில்
வழங்கப்படும்

மேலும் விபரங்களுக்கு
திருவள்ளூர்
மாவட்டத்தில்
உள்ள
கால்நடை
பராமரிப்புத்துறை
இணை
இயக்குனர்
அலுவலகம்
மற்றும்
உதவி
இயக்குனர்
அலுவலகங்களுக்கு
நேரில்
சென்று
தெரிந்துக்
கொள்ளலாம்.
இதுதவிர
https://nlm.udyamimitra.in/, Tamil
Nadu Livestock Development Agency (TNLDA), https://www.tenders.tn.gov.in
ஆகிய இணைய தளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -