மானிய விலையில்
பண்ணைக்கருவிகள்
மானிய
விலையில் பண்ணைக் கருவிகள்
வழங்க உள்ளதால் விவசாயிகள் பயன் பெறலாம் என
சின்னமனூர் வேளாண் உதவி
இயக்குனர் பாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வரின் சிறப்பு வேளாண் திட்டத்தின் கீழ், பண்ணைக் கருவிகள்
மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இத் திட்டத்தின் கீழ்
மண்வெட்டி, களைக்கொத்து,சாந்து
சட்டி, கடப்பாரை தலா
ஒன்று, இரு அரிவாள்
ஒரு தொகுப்பாக வழங்கப்படும். இதன் விலை ரூ.2994.
விவசாயிகளுக்கு 75 சதவீத
மானியத்திலும், ஆதிதிராவிடர், பழங்குடி விவசாயிகளுக்கு 90 சதவீத
மானியத்திலும் வழங்கப்படும்.
பெற
விரும்பும் விவசாயிகள் உழவன்
செயலியில் பதிவு செய்து,
ஆதார், சிட்டா, ரேசன்
கார்டு நகல், போட்டோ,
அலைபேசி எண்ணுடன் வேளாண்
விரிவாக்க மையத்தை தொடர்பு
கொள்ளலாம். சிறுகுறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.