HomeBlog50 சதவீத மானியத்தில் பண்ணைக்கருவிகள் - தேனி

50 சதவீத மானியத்தில் பண்ணைக்கருவிகள் – தேனி

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேனி செய்திகள்

50 சதவீத மானியத்தில் பண்ணைக்கருவிகள்தேனி

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தேனி ஒன்றியத்தில்
கலைஞரின்
ஒருங்கிணைந்த
வேளாண்
வளர்ச்சி
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

அதன்படி அரண்மனைப்புதூர்,
கொடுவிலார்பட்டி,
தப்புக்குண்டு,
தாடிச்சேரி,
பூமலைக்குண்டு,
அம்பாசமுத்திரம்,
குப்பிநாயக்கன்பட்டி
ஆகிய
கிராமங்களில்
செயல்படுத்தப்படுகிறது.

இந்த கிராமங்களில்
உள்ள
விவசாயிகளுக்கு
மண்வெட்டி,
களைக்கொத்தி,
கடப்பாரை,
சீனாத்தட்டு
தலா
1,
அரிவாள்
2
போன்ற
பண்ணைக்கருவிகள்
இந்த
திட்டத்தின்
கீழ்
50
சதவீதம்
மானியத்தில்
வழங்கப்படுகிறது.
இதன்
மதிப்பானது
ரூ.3
ஆயிரமாக
இருக்கும்
நிலையில்,
50
சதவீத
மானியத்தில்
ரூ.1,500-க்கு வழங்கப்படுகிறது.

எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தங்கள் பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலரிடம் சமர்ப்பித்து
பெற்றுக்
கொள்ளலாம்
என
அறிவிக்கபட்டுள்ளது.

மேலும், ஜிங்க் சல்பேட் உரம் 10 கிலோ சிப்பம் விலை ரூ.660. அதற்கும் ரூ.250 மானியமானது வழங்கப்படுகிறது.
ஆகவே
இதனை
விவசாயிகள்
பயன்படுத்திக்
கொண்டு
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular