TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை
படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு
தமிழ் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம்
செப்.30ம் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை
தரமணியில் உள்ள உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு கால முதுநிலை
தமிழ் படிப்பு (எம்.ஏ.)
உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆக.31ம் தேதி
வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவா்களின் வேண்டுகோளை ஏற்று, செப்.
30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோக்கை
விண்ணப்பங்களை, இணையதளம்
மூலமாக பெறலாம்.
இது குறித்து
கூடுதல் தகவல் பெற:
இயக்குநா்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக
வளாகம், தரமணி, சென்னை
– 113 என்ற முகவரியில், நேரில்
அணுகி தெரிந்து கொள்ளலாம்.
மேலும்,
044 – 2254 2992
என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow