பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை மேலும் தெரிவித்திருப்பது: இப்பயிற்சியில் சேர 12-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று 3 ஆண்டுகள் டிப்ளமோ தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 2024, ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இப்பயிற்சி தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். தோ்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். இந்தப் பயிற்சிக்கு இணையதளத்தின் மூலம் ரூ. 100 இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ. 18 ஆயிரத்து 750 ஒரே தவணையில் இணையவழியில் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரின் 9443587759, 9486045666 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.