ராமநாதபுரம் கூட்டுறவுமேலாண்மை நிலையத்தில் புதிதாக துவக்கப்படவுள்ள கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுஉள்ளது.
ராமநாதபுரம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் கூறியிருப்பதாவது:ராமநாதபுரத்தில் புதிதாக துவக்கப்படவுள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் மேலாண்மை நிலையத்திற்கு அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து, பயிற்சி கட்டணம் ரூ.18,750 செலுத்தி பயிற்சியில் சேரலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தலாம், என தெரிவித்துஉள்ளார். மேலும் விபரங்களுக்கு 97867 50554 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.