தமிழக அரசின்
சுற்றுச்சூழல் விருது
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழக
அரசு சார்பில் ஒவ்வொரு
ஆண்டும் சுற்றுச்சூழல் துறையில்
சிறப்பாக செயலாற்றி வரும்
தன்னார்வலர்கள், கல்வி
நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது. இந்த
விருது ஒவ்வொரு ஆண்டும்
இரண்டு பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அவை சுற்றுச்சூழல் கல்வி
மற்றும் விழிப்புணர்வு விருது
மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு விருது
வழங்கப்படும்.
இதில்
சுற்றுச்சூழல் கல்வி
மற்றும் விழிப்புணர்வு விருது
மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு விருது
வழங்கப்பட்டு ரொக்கமும்
வழங்கப்படும். இந்த
விருதுகளை பெற 18 வயது
பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இந்த விருதுகள் பெற
விருப்பமுள்ளவர்கள் இணையதளம்
மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும்
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விவரங்களை பிழையின்றி பூர்த்தி செய்து மார்ச்
19-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது
அதற்கான கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி விண்ணப்பங்கள் அனுப்ப
ஏப்ரல் 30 ஆம் தேதி
கடைசி நாள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.