NEET விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க, 20ம்
தேதி வரை அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.மருத்துவ
படிப்புக்கான நீட்
தேர்வு, ஜூலை 17ல்
நடக்கிறது.
இதற்கான
ஆன்லைன் பதிவு, ஏப்.,
6ல் துவங்கி, இம்மாதம்
7ல் முடிந்தது.
பின்,
இம்மாதம் 15ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என,
அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் இம்மாதம், 20ம்
தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்களை,
https://neet.nta.nic.in/ என்ற
இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.