கட்டாய கல்விக்கு
விண்ணப்பிக்க25ம்
தேதி வரை அவகாசம்
நீட்டிப்பு
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி
வரை கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா செய்திக்குறிப்பு:
இலவச
கட்டாயக்கல்வி உரிமை
சட்டத்தின் கீழ், மாணவர்
சேர்க்கைக்கு 20.4.2022 முதல்
18.5.2022 வரை இணையதளம் மூலம்
பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி, கடந்த
17ம் தேதி வரை
மாவட்டத்தில் 2,975 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது,
பொதுமக்கள் நலன் கருதி
வரும் 25ம் தேதிவரை
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான
விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணங்கள்
இணையதளத்திலும், பள்ளி
தகவல் பலகையிலும் வரும்
28ம் தேதி மாலை
5.00 மணிக்கு வெளியிடப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக
விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்ட பள்ளியில்
வரும் 30ம் தேதி
குலுக்கல் நடத்தி சேர்க்கை
செய்யப்படும். குழந்தைகளின் பெயர் பட்டியல் வரும்
31ம் தேதி வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு
செய்யப்பட்ட மாணவர்கள், ஜூன்
3ம் தேதி பள்ளியில்
சேர்க்க வேண்டும்.