ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இபாஸ் நடைமுறை செப்., 30 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ – பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுற்றுலா பயணிகள் இ – பாஸ் பெற்று சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் ஆய்வு செய்து வருகிறது. இ- பாஸ் முறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ – பாஸ் நடைமுறையை செப்., 30 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow