தமிழகத்தில் மின்
கட்டணம் செலுத்த மே
31 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
உச்சத்தை அடைந்து வருகின்றது. இதன் காரணமாக தற்போது
தமிழக அரசு சார்பில்
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு
வரும் மே மாதம்
24 ஆம் தேதி வரை
அமலில் இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு
எந்த மளிகை கடைகள்,
அத்தியாவசிய பொருட்களை விற்கும்
கடைகள் செயல்பட அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.
மே
24 ஆம் தேதி வரை
முழு ஊரடங்கு அமலில்
இருக்கும் காரணத்தால், மக்கள்
பலரும் வேலைக்கு செல்ல
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு
அரசு பல சலுகைகளை
அறிவித்து வருகிறது. தமிழக
அரசு சார்பில் ரேஷன்
அட்டைதார்களுக்கு 4000 ரூபாய்
நிவாரண நிதியாக வழங்கப்படவுள்ளது. அதே போல்
தற்போது மின்கட்டணத்தை வரும்
மே மாதம் 31 வரை
செலுத்திக் கொள்ளலாம் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது.
தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின்
கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை
அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முழு
ஊரடங்கு மே 10 முதல்
மே 24 வரை இருக்கும்
காரணத்தால் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால்
மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.