ஏற்றுமதி வாய்ப்புகள் 3 நாள் இணையவழி பயிற்சி
ஏற்றுமதி
வாய்ப்புகள்மற்றும் வியாபாரம்
துவங்குதல் குறித்த, மூன்று
நாள் இணையவழி பயிற்சியை,
தமிழ்நாடு தொழில் முனைவோர்
மேம்பாடு மற்றும் புத்தாக்க
நிறுவனம் நடத்துகிறது.
இது
குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஏற்றுமதி
வாய்ப்புகள் மற்றும் வியாபாரம்
துவங்குதல் குறித்த, இணைய
வழி பயிற்சி, நாளை
முதல், மார்ச், 1ம்
தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஏற்றுமதி வாய்ப்பு
மற்றும் வியாபாரம் துவக்குதல் தொடர்பான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
18 வயது
நிரம்பிய, 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற, ஆண்,
பெண் இரு பாலரும்
சேரலாம். விபரங்களை 94445 56099, 94445
57654 ஆகிய மொபைல் எண்களிலும் www.editn.in என்ற
இணையதளத்திலும் தெரிந்து
கொள்ளலாம்.