தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலைக் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணியிடங்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதால் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா் (ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) இரண்டாம் நிலைக் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணியிடங்களுக்கு பொதுத் தேர்வு-2023 நடைபெறவுள்ளது.
இதில், ஆண்களுக்கு மட்டும் 2,576 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின்படி 129 காலிப் பணியிடங்கள் முன்னாள் படைவீரா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.விண்ணப்பதாரா்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2023 அன்று 47 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யாதவா்கள் மற்றும் விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னா் ஓராண்டு காலத்துக்குள் ஓய்வுபெறவுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் செப்டம்பா் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பித்த பின் அவா்களது பெயரை கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.