சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 12ல் கட்டுரை, பேச்சு போட்டி நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:தமிழ் வளர்ச்சி துறை மூலம் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் ஜூலை 12 அன்று காலை 9:30 மணிக்கு நடத்தப்படும். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வீதம் வழங்கப்படும். மேலும் பாராட்டு சான்றும் உண்டு. சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் மூலம் முதலில் பள்ளி, வட்டார அளவில் போட்டிகள் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் இருந்து 60 மாணவர்கள் மாவட்ட போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.பேச்சு, கட்டுரை போட்டி தலைப்புகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவிக்கப்படும், என்றார்.