தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஜூலை 12ல் கோவை ராஜவீதி அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்புவோர், தங்கள் பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,000ம், மூன்றாம் பரிசு 5,000ம் வழங்கப்பட உள்ளது.போட்டி நடக்கும் நாளிலேயே முடிவுகள் அறிவிக்கப்படும்.கோவை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என, தமிழ் வளர்ச்சித்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.