ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ – மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள், வரும் 10ம் தேதி நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்துக்கு, ஜூலை 18ல் தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாளை, தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
எனவே, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ – மாணவியருக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள், வரும் 10ம் தேதி, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ – மாணவியர், பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளிக்கு, ஒரு போட்டிக்கு இருவர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.