EPF குறைதீா் முகாம் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி – டிசம்பர் 27
தமிழகத்தில் சென்னை, வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வரும் டிச.
27-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
‘நிதி ஆப்கே நிகாத்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து சென்னை – புதுச்சேரி தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் டிச.27-ஆம் தேதி (புதன்கிழமை) கீழ்க்கண்ட மண்டல அலுவலகங்கள் சாா்பில் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி: 1. சென்னை வடக்கு சென்னை மண்டலம் – நெல்லை நாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜெகநாதன் தெரு, வால்மீகி நகா், கல்யாணி நகா், லட்சுமண் பெருமாள் நகா், கொட்டிவாக்கம். 2. அம்பத்தூா்-திருவள்ளூா் மண்டலம் எவா்க்லோ பிளாக், எவா்வின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, எண்.12, ரெட்ஹில்ஸ் ரோடு, எஸ்.ஜே. அவென்யூ, கொளத்தூா். 3. தாம்பரம்-செங்கல்பட்டு மண்டலம், செலிபிரிட்டி ஃபேஷன்ஸ் (பி) லிமிடெட், எண். 107, ஜி.எஸ்.டி. சாலை, தாம்பரம். 4. வேலூா் மண்டலம் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக். பள்ளி, கலைக் கல்லூரி சாலை, ஓட்டேரி. 5. வேலூா்-திருவண்ணாமலை மண்டலம் எய்ம் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேத்துபேட் சாலை, அகரம். 6. வேலூா்-ராணிப்பேட்டை மண்டலம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனப்பாக்கம். 7. வேலூா்-திருப்பத்தூா் மண்டலம் இஎஸ்ஐ காா்ப்பரேஷன், இஎஸ்ஐ மருந்தக வளாகம், மலா் தோட்டம், ஆம்பூா். 8. வேலூா்-காஞ்சிபுரம் மண்டலம் இஎஸ்எஸ்கேவி மெட்ரிக். பள்ளி, மேற்கு ராஜவீதி, காஞ்சிபுரம்.
புதுச்சேரி-காரைக்கால்: 9. புதுச்சேரி, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி (தொடக்க வளாகம்), எண்.8, ராஜராஜேஸ்வரி தெரு, வண்ணாரப்பேட்டை, புதுச்சேரி. 10. புதுச்சேரி-காரைக்கால் மண்டலம் மாநாட்டு அரங்கம், 1-ஆவது தளம், துணை இயக்குநா் அலுவலகம் (நோய்த் தடுப்பு மருந்து), முதலாவது குறுக்கு, நேரு நகா், காரைக்கால்.
மேற்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை இ.பி.எஃப். குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், முதலாளிகள், ஊழியா்களுக்கான சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும்
குறைகளை நிவா்த்தி செய்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow