பயிற்சிப் பணி–வேலைக்கான நுழைவு வாயில்
கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புதிதாக
வேலைச்சந்தையில் களம்
இறங்குவோருக்கு பணி அனுபவம் என்ற பகுதி காலியாக
இருக்கும்.
இப்படிப்பட்ட விண்ணப்பங்கள், வேலைக்கு
ஆளெடுக்கும் நிறுவனங்களின் கவனத்தை
ஈர்க்காது/விரும்பமாட்டார்கள்.
வேலைக்கு
சேருவதற்கு முன்பே அந்த
வேலை தொடர்பான அனுபவம்
எப்படி கிடைக்கும்? அதுதான்
இன்டர்ன்ஷிப் எனப்படும்
பயிற்சிப்பணி.
இளநிலை
அல்லது முதுநிலை கலை,
அறிவியல், வணிகம், பொறியியல்
என எந்தப் படிப்பாக
இருந்தாலும், படிக்கும்காலத்தில் தொழில்–வர்த்தக–பன்னாட்டு
நிறுவனங்களில் பயிற்சிக்காக பணியில் ஈடுபடுவதையே பயிற்சிப்பணி என்று அழைக்கிறார்கள்.
தொழிலகங்களில் காணப்படும் வேலைச்சூழல், எதிர்கொள்ளும் சவால்கள், தொழில்நுட்பசிக்கல்கள், அவற்றுக்கான தீர்ளகளைக் கண்டறிய படித்தவற்றை சீரியமுறையில் பயன்படுத்துவது உள்ளிட்ட அனுபவங்களைப் பெறுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பே பயிற்சிப்பணி ஆகும். ஒருவரின் வேலைத்திறனை மதிப்பிடுவதற்கு காலாகாலமாக கடைபிடிக்கப்படும் அளளகோல்
தான் பயிற்சிப்பணி.
வேலைக்கான
விண்ணப்பங்கள் அல்லது
தன்விவரக்குறிப்பில் பயிற்சிப்பணி குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தால், உடனடியாக நேர்காணலுக்கு அழைப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலைக்கான நுழைளவாயிலாக, பயிற்சிப்பணி அமைந்துள்ளது. பயிற்சிப்
பணியை எப்படி அணுகுவது?
வேலை
கேட்டு அளிக்கப்படும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் உங்களை
வேலைக்குத் தகுதியானவராக தேர்ந்தெடுக்க தன்விவரக்குறிப்பில் பயிற்சிப்பணி குறித்த
விவரங்கள் இடம்பெறுவது கூடுதல்
பலத்தைத் தரும். பயிற்சிப்பணி விவரங்கள் வலுவாக இருந்தால்,
வேலைக்கு தேர்ந்தெடுப்பது எளிதான
பணியாக மாறும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வி,
திறன்கள் உள்ளிட்டவிவரங்களை பயிற்சிப்பணி அனுபவம் உறுதிப்படுத்தும் என்பதால்,
வேலைச்சந்தையில் அதன்
மதிப்பு பெருகி வருகிறது.
கல்வித்தகுதியைக் காட்டிலும், பயிற்சிப்பணி தான்
வேலைக்கு உங்களை தேர்ந்தெடுக்க வலுவான அடித்தளமாக மாறும்.
அது உங்கள் திறன்
மீதான நம்பகத் தன்மையை
உயர்த்தும்.
பயிற்சிப்பணிகாலத்தின்போது புதிய திறன்களை
கற்றுக்கொள்வதோடு, வேலை
அனுபவத்தையும் நேரடியாக
பெறஇயலும். மேலும் தொழில்முறை சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ளளம் வாய்ப்பு ஏற்படும்.
குழுவாக இயல்பாக பணியாற்றும் தன்மையும், பணியாற்றும் குழுவினர்
மற்றும் வாடிக்கையாளருடன் இயல்பாக
கலந்துரையாடும்போது பல்வேறு
தகவல்களை, திறன்களை பெருக்கிக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
ஒரு
சில நேரங்களில் பிழை
ஏற்படும்போது, அது
பாடமாக மாறுவதோடு, அந்த
தவறுகள் பெரிதாக எடுத்துக்
கொள்ளப்படாது. தவறுகள்,
சரியானவற்றை மட்டுமல்ல, புதியனவற்றையும் கற்க வழிவகுக்கும். அது
உங்கள் வேலை அல்லதுதொழில்திறனை மேம்படுத்தி,கூர்மையாக்கும்.
வேலைக்கு
உங்களைத் தகுதியுள்ளவர்களாக படம்பிடித்துகாட்ட முனைவதோடு, எந்த
பணியில் உங்களின் இயல்பானதிறனும், ஆர்வமும் பொருந்தி வருகின்றன
என்பதை பயிற்சிப்பணி மூலம்
கண்டுணரலாம். பல்வேறுதுறைசார்ந்த பயிற்சிப்பணிகளை மேற்கொண்டு, அதில் உங்களுக்குப் பிடித்த வேலையை நிரந்தரப்
பணியாக தெரிளசெய்யலாம்.
பெற்றிருக்கும் ஒருவர், அந்த துறை
மட்டுமல்லாது விற்பனை,
சந்தைப்படுத்தல், வர்த்தக
மேம்பாடு உள்ளிட்டவற்றிலும் பயிற்சிப்
பணியை மேற்கொண்டிருந்தார். தான்
படித்திருக்கும் பொறியியல்
படிப்புசார்ந்ததுறையில் வேலைசெய்ய
விரும்பாமல், தனக்கு பிடித்தமான சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி
பணியில் சேர்ந்துவிட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டளடன், அடுத்த என்ன
செய்ய வேண்டும்? அல்லது
வாழ்க்கைத் தொழிலாக எந்தத்
துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
என்ற தெளிள மாணவப்பருவத்தில் இருக்காது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்களின் அழுத்தம்
அல்லது ஆலோசனையின்பேரில் ஏதோ
ஒரு படிப்பில் சேர்ந்துவிடுவோம்.
அந்த
படிப்பு சார்ந்த தொழில்
அல்லது வர்த்தகத்தில் மனம்
ஒன்றியில்லாதபோது, அதை
வாழ்க்கைத் தொழிலாக எடுத்து
வெற்றி பெற இயலாது.
பயிற்சிப்பணியை மேற்கொள்ளும்போது மனம்விரும்பும் வேலையை
எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதன்
முடிவில், பிடித்த வேலையில்
சேர வாய்ப்புக் கிடைக்கும்.
பயிற்சிப்பணியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?
வேலைதிட்டங்களில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றுவது, இயல்பாக மனதில் தோன்றும்
சில கேள்விகளுக்கு விடைகாண
உதளம். புதிய புதிய
யோசனைகளைப் பகிர்ந்துகொள்வது, புதிய
கோணத்தில் சிந்திப்பது பயிற்சிப்பணியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.
வேலைத் திட்டத்தை முன்கூட்டியே ஆராய்ந்து திட்டமிட்டு, அதை
செயல்திறனோடு, குறித்த
நேரத்தில் முடித்தால் உங்கள்
திறன், அக்கறை, உறுதிப்பாடு வெளிப்படும். இலக்குடன் கூடிய
ஆராய்ச்சிகள், அதன்
மூலம் வெளிப்படும் யோசனைகள்,
அவற்றைச் சீராகப் பகிர்ந்துகொண்டு செயல்பாட்டுக்கு கொண்டு
வருவது போன்றவை உண்மையான
வேலையில் சேரும்போது பொறுப்புணர்ந்து செயல்படுவதற்கு உங்களுக்குப் பயிற்சி தரும்; திடப்படுத்தும்.
புதிய
யோசனைகளால் ஏற்படும் பின்விளைளகள், செயல்பாட்டுத்தன்மை, சாத்தியக்கூறு, தேவைப்படும் முயற்சி, எதற்கு
முன்னுரிமை அளிப்பது போன்றவற்றை ஆராய்ச்சி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
பயிற்சிப்
பணி என்பதே புதிய
கற்றல் அனுபவத்தை ஈட்டுவதுதான். புதிய திறன், மின்னஞ்சல் நெறிமுறைகள், மெய்ந்நிகர் கூட்டங்களை நடத்துவது தொடர்பான நெறிமுறைகள்.. இப்படி புதிதாக எது
இருந்தாலும் அவற்றைக் கற்கும்
வாய்ப்பை தவறவிடக் கூடாது.
அணித்தலைவர் அல்லது அணியினரிடம் தகுந்த
வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளைப் பெறுவதன் வாயிலாக புதியனவற்றைக் கற்கலாம். அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோரின் வேலையைக்
கூர்ந்து கவனிப்பதன் மூலமும்
கற்றுக் கொள்ளலாம். செய்து
முடிக்கும் வேலை குறித்து
குழுவினரின் கருத்துகளைக் கேட்டறிவதன் மூலமும் புதியனவற்றை கற்கலாம்.
வாடிக்கையாளர் ஒருவருக்கு மின்னஞ்சல் எழுதினால், அதன்
முடிவில், அது குறித்து
மேலாளர் அல்லது அணியினரின் கருத்தறிந்து, அந்த
மின்னஞ்சலை மேலும் கூர்மையாக்கலாம். பயிற்சிப்பணியின்போது கற்பவை
குறித்துதன்னாய்ள செய்துகொண்டே இருப்பது, வேலைத்திறனை செழுமையாக்கும்.
தொழில்முறைத் திறனை வெளிப்படுத்துவது குறித்த
நேரத்தில் வேலையை முடிப்பதுதான். அந்த பழக்கத்தைக் கற்றறிவதற்கு பயிற்சிப்பணி சிறந்தவாய்ப்பு அளிக்கிறது. கொடுத்த வேலைத்
திட்டத்தை குறித்த நேரத்தில்
முடிப்பது மட்டுமல்ல, நேரத்திற்கு அலுவலகம் செல்வதும், கூட்டத்தில் கலந்துகொள்வதும் நேரமேலாண்மை தான். இந்த பழக்கம்,
உங்கள் நேரத்தையும், பிறரின்
நேரத்தையும் மதிக்கும் பண்பை
வெளிப்படுத்தும்.
கொடுத்த
வேலைத்திட்டத்தைச் சொந்த
முயற்சியில் முழுமையாக முடிப்பதை
போல, அணியினரோடு இயைந்து
பணியாற்றுவதும் மிக
மிக முக்கியமாகும். பயிற்சிப்பணியின்போது ஓர் அணியோடு
இணைந்துதான் வேலைத்திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.
முழுமையடைவதற்கு, அடுத்த அணி தரவேண்டிய
துணைபொருள் அல்லது மென்பொருள் நிரல் முக்கியமானதாக இருக்கும்.
அந்த அணியினர் அதைக்
குறித்த நேரத்தில் கொடுத்தால் தான், உங்கள் அணியினர்
வேலையைத் திட்டமிட்டப்படி முடிக்க
முடியும். எந்த முயற்சியாக இருந்தாலும் அது கூட்டுமுயற்சியாகத் தான் இருக்கும்.
அதற்கு
சரியான புரிதலும், ஒழுங்கமைவான செயல்பாடுகளும் அடித்தளமாக அமையும். அணியினரோடு ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, முரண்பாடான காலகட்டத்தை அமைதியாகக் கையாண்டு,
குறித்த நேரத்திற்குள் வேலையைச்
செய்துமுடிப்பது, அணியில்
ஒருவராக நீங்கள் பணியாற்றி
வருகிறீர்கள் என்பதை
உணர்த்தும்.