Sunday, December 22, 2024
HomeBlogதமிழக மின் வாரிய கள பிரிவில் 10,200 பேருக்கு வேலை - மின் வாரியம் அரசிடம்...
- Advertisment -

தமிழக மின் வாரிய கள பிரிவில் 10,200 பேருக்கு வேலை – மின் வாரியம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது

Employment of 10,200 people in the field division - Electricity Board has sought permission from the government

TAMIL MIXER EDUCATION.ன்
மின் வாரிய செய்திகள்

தமிழக மின்
வாரிய
கள பிரிவில் 10,200 பேருக்கு
வேலை

மின் வாரியம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது

ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க மின்
வாரியம், மின் கம்பம்
நடுதல் உள்ளிட்ட பணிகளை
மேற்கொள்ளும் கள
பிரிவில், 10 ஆயிரத்து 200 பேரை
தேர்வு செய்ய, தமிழக
அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

தமிழக
மின் வாரியத்தில் உதவி
பொறியாளர், கள உதவியாளர்
உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 54 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் ஒருவரே,
இரண்டு, மூன்று பேர்
செய்ய வேண்டிய வேலைகளை
செய்கின்றனர். இதனால்,
600
உதவி பொறியாளர்; 1,300 கணக்கீட்டாளர்; 500 இளநிலை உதவியாளர்
கணக்கு; 2,900 கள உதவியாளர்
ஆகிய பதவிகளுக்கு ஆட்களை
தேர்வு செய்ய, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதற்கு,
இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். கொரோனா
ஊரடங்கு, சட்டசபை தேர்தலால்
தேர்வு நடத்தவில்லை. அந்த
தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இந்தாண்டு ஜூலை, 4ல்
மின் வாரியம் அறிவித்தது. காலி பணியிடங்களை விரைந்து
நிரப்புமாறு, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வருகின்றன.இந்நிலையில், மின் கம்பம் நடுதல்,
கேபிள் பதிப்பு உள்ளிட்ட
பணிகளை மேற்கொள்ளும் கள
பிரிவில், 10 ஆயிரத்து 200 பேரை
தேர்வு செய்ய மின்
வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு, அரசிடம் ஒப்புதல்
கேட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அனைத்து
பதவிகளுக்கும், மின்
வாரியமே தேர்வு நடத்தி
ஆட்களை நியமித்தது. தற்போது,
மின் வாரியம் உட்பட
அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தமிழக அரசு
பணியாளர் தேர்வாணையம் தேர்வு
செய்ய உள்ளது. மின்
வாரியத்தில் அவசர தேவையாக,
கள பணிக்கு தான்
ஆட்கள் தேவை. எனவே,
கள பணிக்கு, 10 ஆயிரத்து
200
ஊழியர்களை நியமிக்க, அரசிடம்
அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி
கிடைத்ததும், தேர்வாணைய அதிகாரிகளை சந்தித்து, ஆட்கள் தேர்வு
செய்து தர வலியுறுத்தப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -