சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 19 அன்று தனியார்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அன்று காலை 10:30 மணிக்கு முகாம் துவங்கும்.
தனியார் துறை நிறுவனங்கள் இம்முகாமில் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் இலவச திறன் தேர்வு பயிற்சிக்கான விண்ணப்பம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு முதல் பட்டம் வரை முடித்தவர்கள் உரிய சான்றுடன் முகாமில் பயன்பெறலாம்.
I am interested job