LIC முகவர்
பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
கடலுாரில்
கிராமிய தொழில் முறை
முகவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம்
தேதி நடக்கிறது.
இதுகுறித்து கடலுார் எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி கோமதி நாயகம் விடுத்துள்ள அறிக்கை:
பொதுத்
துறை நிறுவனமான எல்.ஐ.சி.,
கடலுார் அலுவலகத்தில் கிராமிய
தொழில் முறை முகவர்
பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
வரும் 29ம் தேதி
காலை 10.00 மணி முதல்
மதியம் 1.00 மணி வரை
நடக்கிறது.இதில், சேர
21 வயது முதல், 45 வயது
வரை இருக்க வேண்டும்.
பகுதி
நேர முகவராக பணிபுரிய
60 வயது வரை உள்ள
ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். பணிப்பயன்களாக 5,000 ரூபாய் ஊக்கத்
தொகை, மருத்துவ காப்பீடு,
குழுக்காப்பீடு, வாகன
வசதி வழங்கப்படும்.
நேர்காணலுக்கு வருவோர் ஆதார் அட்டை,
பான் கார்டு, கல்விச்
சான்று, புகைப்படம் எடுத்து
வர வேண்டும். மேலும்,
விவரங்களுக்கு 9443414241
என்ற எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.