Friday, April 25, 2025
HomeBlogEMI செலுத்துவதில் இருந்து 6 மாதத்திற்கு விலக்கு பெற்றிருந்தால், அசலும் வட்டியும் நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி...
- Advertisment -

EMI செலுத்துவதில் இருந்து 6 மாதத்திற்கு விலக்கு பெற்றிருந்தால், அசலும் வட்டியும் நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி எவ்வளவு ?

EMI Tamil Mixer Education
FINAL WHATASPP 57 Tamil Mixer Education
loan 32 Tamil Mixer Education




கொரோனா
பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் வேலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களின் வசதிக்காக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு EMI
எனப்படும் கடன் தவணையை கட்ட வேண்டாம் என்று தள்ளி வைத்தது.




இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் மேலும் 3 மாதங்களுக்கு கடன் தவணை தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே
EMI
கடன் தள்ளிவைப்பின் படி கடனை கட்டாமல் விட்டால் , எதிர்காலத்தில் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தார்கள். ஏனெனில் 6 மாதத்திற்கான கடனை வட்டியுடன் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருந்தன.




வங்கிகளுக்கு மிகப்பெரிய லாபம் தரும் திட்டமாக EMI
தள்ளிவைப்பு திட்டத்தை பொருளாதார நிபுணர்கள் பார்க்கிறார்கள். ஏனெனில் இதற்கு சிறய விளக்கத்தை இப்போது பார்ப்போம். ஒருவருக்கு மாதம் EMI
என்பது ரூ10,000 ஆக
இருக்கும் பட்சத்தில் அவர் 6 மாதம் EMI
கட்டாமல் இருந்திருப்பார். அப்படி கட்டாமல் இருந்த தொகை ரூ.60,000 ஆக
இருக்கும். இதை அப்படியே கட்ட சொன்னால் தான் வாடிக்கையாளர்களுகு சாதகமாக இருக்கும். உதாரணம்: ஆனால்
நிலைமை இப்போது வேறாக உள்ளது. ஆறு மாதம் EMI
கட்டாமல் விட்டால் ஏற்பட்ட ரூ.60,000.கும்
கடன் வாங்கிய அதே சதவீதத்தில் வட்டி வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. உதாரணமாக நீங்கள் 12 சதவீதத்தில் வாங்கிய கடனை அசலும் வட்டியும் என அதை 10000 வீதம்
36
மாதங்களில் திருப்பி செலுத்துவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக வைத்து கொள்வோம். இதில் 24 மாதங்கள் EMI
கட்டி விட்டீர்கள் என்றால் 12 மாதங்களே செலுத்த வேண்டிய நிலை இருந்திருக்கும்.




ஆனால்
நீங்கள் 6 மாத EMI
சலுகை வாங்கி இருந்தால், 6 மாத தவணை தொகையான ரூ.60,000க்கு
, 12
சதவீத வட்டியுடன் கணக்கிட்டால் ஒரு ஆண்டுக்கு ரூ.7200 கூடுதல்
வட்டி கட்ட வேண்டியதிருக்கும். அதாவது மீதமுள்ள தவணை மாதங்களான 12 உடன், 6 மாதம் கட்டமால் விட்ட 60000 ரூபாயை
பெருக்கி, அதை 12 சதவீத வட்டியுடன் கணக்கிட்டால் ரூ.7200 கூடுதலாக கட்ட வேண்டியது வரும். (எப்படி கணக்கிடுவது : மீதமுள்ள EMI
மாதங்கள் x 6மாதம் கட்டாமல் விட்ட EMI
தொகை x வட்டி சதவீதம் = மீதமுள்ள மாதங்களுக்கு கட்ட வேண்டிய வட்டி தொகை)
அதாவது
கட்டாமல் விட்ட 60000 கடன்
தொகையுடன் மொரோட்டோரியம் வட்டியான 7200 சேர்த்து 67200
நீங்கள் செலுத்த வேண்டியது வரும். நீங்கள் ஆறு மாத தவணையை 7 மாதமாக மாற்றிக்கொள்ளலாம். 7200
12
மாதத்தில் பிரித்துக் கட்டிக் கொள்ளலாம் என வங்கிகள் ஆப்சன் வழங்க வாய்ப்பு உள்ளது. இந்த தவணை வங்கிகளில் நீங்கள் வாங்கிய கடன், வைத்துள்ள இஎம்ஐ, கட்டாமல் விட்ட EMI
ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.
share 25 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 57 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -