தமிழகத்தில் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பள்ளிகள்
சரிவர இயங்க முடியாத
காரணத்தால் தமிழக மாணவர்களின் நலன் கருதி 9ம்
வகுப்பு இறுதித் தேர்வையும், 10 மற்றும் 11ம் வகுப்பு
மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து தமிழக
அரசு அறிவிப்பு வெளியிட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழக
அரசின் இந்த அரசாணையை
எதிர்த்து ஆசிரியர் சங்கம்
சார்பில் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு
ஒன்று தொடரப்பட்டது. இந்த
வழக்கின் விசாரணையில் 10ம்
வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து
செய்யப்பட்டாலும், 11ம்
வகுப்பில் மாணவர்கள் தங்கள்
விருப்பப் பாடத்தை தேர்வு
செய்வதற்கு தகுதித் தேர்வுகள்
நடத்தப்பட வேண்டும் என்று
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்
வாதத்தின் போது பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து
கலந்தாலோசனைகள் ஏதும்
மேற்கொள்ளவில்லை. தேர்தல்
நெருங்குவதால் தான்
இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நீதிபதிகள் இந்த அரசாணையை
ரத்து செய்ய முடியாது
என்றும், 11ம் வகுப்பில்
மாணவர்கள் தங்கள் விருப்பப்
பாடத்தை தேர்வு செய்வதற்காக பள்ளிகள் அளவில் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வுகள் நடத்திக் கொள்ளலாம்
என்றும், இது குறித்து
பள்ளிக்கல்வித்துறை உரிய
வழிகாட்டுதல்களை பள்ளிக்கு
வழங்க வேண்டும் என்றும்
உத்தரவிடப்பட்டுள்ளது.