முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் வகையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணையில், அக்னிபத் திட்டத்துக்கான முன்பதிவுகள் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to Download AGNIVEER Notification
இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindianarmy.nic.in – இல் அக்னிபத் திட்டத்தின் முழு விவரம், சேர்பவர்களுக்கான கல்வித் தகுதி, விதிமுறைகள், வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓட்டப்பந்தயங்கள் போன்ற உடற்தகுதித் தேர்வுகள் ஜூலை முதல் தொடங்கும் என்று அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முப்படைகளில், அக்னிபத் தொடர்பான அறிவிப்பாணையை இந்திய ராணுவம் முதலில் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவின் தொழில்நுட்ப வீரர்களைத் தவிர்த்து, பிற பிரிவுகளுக்கு ஒரு நுழைவு முனையமாக மட்டுமே அக்னிபத் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் என்ற https://joinindianarmy.nic.in இணையளதளத்தில் முன்பதிவு வசதி தொடங்கியதும், அக்னிபத்தில் இணைய விரும்புவோர் பதிவு செய்து கொள்வது அவசியம். ராணுவத்தில் ஏற்கனவே இருக்கும் எந்த ரேங்க்-கிலும் அக்னிவீரர்கள் வர மாட்டார்கள். அவர்களுக்கு தனி ரேங்க் உருவாக்கப்படும்.
பொதுப் பணிக்கு, 45 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
‘அக்னிபத்’ திட்டம் – ராணுவத்தில் சோ்வதற்கான விதிமுறைகள்
தொழில்நுட்பப் பிரிவு பணிக்கு, விமானப் போக்குவரத்து மற்றும் வெடிபொருள் ஆய்வாளர் பணிக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்து 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டியது அவசியம்.