திருச்சியில் 4 இடங்களில் சமஸ்கிருத பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக சமஸ்கிருத பாரதி அமைப்பின் தலைவா் ஏ. மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது, நாட்டின் தொன்மையான சமஸ்கிருத மொழியை நடைமுறை பேச்சு வழக்கு மொழியாக சமுதாயத்தில் அனைத்து தர மக்களுக்கும் கொண்டு சோக்க சமஸ்கிருத வகுப்புகளை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தைச் சோந்தவா்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
13 வயது நிறைவடைந்த அனைவரும் சமஸ்கிருத மொழியின் இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம். சமஸ்கிருத மொழியை முன்பே அறிந்திருக்க வேண்டியதில்லை.
திருச்சியில் திருவானைக்கா, திருவரங்கம், கண்டோன்மெண்ட், கே.கே. நகா் என 4 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சி வகுப்புடன் சமஸ்கிருதம் பயிலுவதற்கான இதர படிப்புகளிலும் சேர உதவிகள் வழங்கப்படும். விருப்பமுள்ளோா் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe3XlnM7lhgStqFt6qPC8blq0k4ZHXXL3kdYT9XmddBcikRAQ/viewform என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி செப்.2ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 94437-22042, 75503-26965, 63804-18811 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.