Sunday, December 22, 2024
HomeBlogதிருமண நிகழ்வுகளுக்கு இ-பதிவு அனுமதி இல்லை – தமிழக அரசு
- Advertisment -

திருமண நிகழ்வுகளுக்கு இ-பதிவு அனுமதி இல்லை – தமிழக அரசு

E-registration is not allowed for wedding events - Government of Tamil Nadu

திருமண நிகழ்வுகளுக்கு பதிவு அனுமதி
இல்லைதமிழக அரசு

தமிழகத்தில் கடந்த வருட கொரோனா
பரவலின் போதே மாவட்டம்
விட்டு மாவட்டம் செல்ல
பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி
அவசர தேவைகளுக்காக விண்ணப்பித்து பாஸ் பெற்றுக்
கொள்ளலாம். அதை வைத்து
பயணம் செய்யலாம். மக்களின்
நடமாட்டத்தை குறைக்கவும், பெருகி
வரும் நோய் தொற்றை
கட்டுப்படுத்த அரசு
இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால்
மக்கள் தேவையின்றி வெளியில்
செல்வது தடுக்கப்படுகிறது.

தற்போது
தமிழகத்தில் கொரோனா இரண்டாம்
அலை தீவிரமாக பரவி
வருவதால் அரசு நோய்
தடுப்பு நடவடிக்கையாக மாநிலம்
முழுவதும் 14 நாட்களுக்கு முழு
ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால்
மக்கள் வெளியே செல்ல
முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால்
மாவட்டம் விட்டு மற்ற
மாவட்டங்களுக்கு செல்ல
பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் இறப்பு,
மருத்துவம், திருமணம் போன்ற
முக்கிய காரணங்களுக்கு மட்டும்
அனுமதியளிக்கப்பட்டது.

பிறகு
திருமண காரணங்களை கூறி
அனைவரும் பதிவு
செய்வதால் அரசு திருமணம்
என்ற காரணத்தை நீக்கியது.
பிறகு பல்வேறு மக்களின்
கோரிக்கையை ஏற்று அரசு
இன்று காலை மீண்டும்
திருமணம் காரணம் பதிவு
இணையதளத்தில் மீண்டும்
சேர்க்கப்பட்டது. இதனால்
நோய் பரவும் அபாயம்
இருப்பதால் அரசு தற்போது
மீண்டும் திருமணம் என்ற
பிரிவு இணையதளத்தில் இருந்து
நீக்கியுள்ளது. இது
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -