தமிழகத்தின் 11 கல்வி
நிறுவனங்களில் இணையவழி
கல்வி – யுஜிசி
Corona ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பல்வேறு கல்விச் சீர்திருத்தங்களை
மத்திய அரசு செய்து
வருகிறது. அதில் மிக
முக்கியமானது இணையவழிக்
கல்வி திட்டமாகும். தேசிய
கல்விக் கொள்கையை ஒட்டி
மே மாதம் பேசிய
பிரதமர் மோடி இணையவழிக்
கல்வி, இந்த கல்விக்
கொள்கையின் மையமாக இருக்கும்
என்றும் இணையவழிக் கல்வி,
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியாவின் கல்வியை
உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.
நாடு
முழுவதும் உள்ள கல்வி
நிறுவனங்களில் நாக்
அங்கீகாரம் அல்லது தேசிய
தரவரிசை பட்டியலில் (என்ஐஆர்எப்) முன்னணியில் உள்ள கல்வி
நிறுவனங்களுக்கு யுஜிசி
இணையவழியில் கல்வி பயிற்றுவிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி 2021-ஆம் ஆண்டு
இணையவழி திட்டத்தின் கீழ்
37 கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்
சேர்க்கை நடத்த அனுமதி
வழங்கியுள்ளது.
இதில்
தமிழகத்தில் உள்ள 11 கல்வி
நிறுவனங்களுக்கு இணையவழி
கல்வி நடத்த அனுமதி
வழங்கியுள்ளது. அண்ணா
பல்கலைக்கழகத்தில் ஒரு
முதுநிலை படிப்புக்கும், பாரதிதாசன் பல்கலையில் 11 படிப்புகளுக்கும், மதுரை
காமராஜர் பல்கலையில் 11 படிப்புகளுக்கும், பெரியார் பல்கலையில் 7 படிப்புகளுக்கும், அழகப்பா
பல்கலையில் 12 படிப்புகளுக்கும் இந்த
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது
தவிர தனியார் கல்வி
நிறுவனங்களில் 6 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.