DRDO செயற்கை நுண்ணறிவு
& சைபர் பாதுகாப்பு பயிற்சி
வகுப்புகள்
டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் மேம்பாடு அமைப்பின்
(DRDO) சார்பில் செயற்கை நுண்ணறிவு,
இயந்திர கற்றல் மற்றும்
சைபர் பாதுகாப்பு போன்ற
குறுகிய கால பயிற்சி
வகுப்புகளை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
அமைப்பு சார்பில் செயற்கை
நுண்ணறிவு, இயந்திர கற்றல்
மற்றும் சைபர் பாதுகாப்பு போன்றவற்றில் குறுகிய
கால பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பயிற்சி
வகுப்புகள் 12 வாரங்கள் நடத்தப்பட
உள்ளன. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக
நுழைவுத்தேர்வு எழுதி
தேர்ச்சி அடைந்தபின் கலந்து
கொள்ளலாம்.
இந்த
நுழைவுத்தேர்வுக்கு இலவச
பதிவு செய்யலாம். இந்த
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் பட்டப்படிப்பு அல்லது
அதற்கு இணையான படிப்பு
முடித்திருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் இன்று
முதல் பெறப்பட்டு பிப்ரவரி
15 ஆம் தேதி வரை
நடைபெறுகிறது.
பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படும். நுழைவுத்
தேர்வுகள் – செயற்கை நுண்ணறிவு
தேர்வுக்கு பிப்ரவரி 20 ஆம்
தேதி, இயந்திர கற்றல்
பயிற்சிக்கு பிப்ரவரி 21 ஆம்
தேதி மற்றும் சைபர்
பாதுகாப்பு பயிற்சிக்கு பிப்ரவரி
28 ஆம் தேதி தேர்வுகள்
நடைபெறும்.
விண்ணப்பங்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி
வரை அனுப்பலாம்.