திருப்பூர், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியரும், தலைவருமான மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தில் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.இந்த பயிற்சியில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்குள்ள நாடுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று பயன்பெறலாம்.
மேலும் தகவல்களுக்கு 0421–2248524 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.