நாளை நீடாமங்கலத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ.30) லாபம் தரும் நாட்டுக் கோழி வளா்ப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
பயிற்சியில் நவீன நாட்டுக் கோழி ரகங்கள், குஞ்சுகள் பராமரிப்பு, முட்டை கோழி பராமரிப்பு, சண்டை சேவல்கள் பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவனம் பராமரிப்பு, நாட்டுக் கோழிகளை சந்தைப்படுத்துதல், நோய்த் தடுப்பு மேலாண்மை, பாரம்பரிய வைத்தியம், வங்கிக் கடனுதவிகள், அரசு உதவித் திட்டங்கள் மற்றும் அரசு மானிய கடனுதவி திட்டங்கள் குறித்து கால்நடை மருத்துவா்கள், வங்கி மேலாளா்கள் மற்றும் அனுபவமிக்க பண்ணையாளா்கள் பயிற்றுவிக்க உள்ளனா்.
எனவே, கோழி வளா்ப்பவா்கள் மற்றும் வளா்க்க விரும்புவா்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியார்ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow