HomeBlogஇந்தியா முழுவதிலும் மெச்சூரிட்டி கிளைம் டெபாசிட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் - LIC
- Advertisment -

இந்தியா முழுவதிலும் மெச்சூரிட்டி கிளைம் டெபாசிட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் – LIC

 

Documents for Obtaining Maturity Claim Deposit Across India - LIC

இந்தியா முழுவதிலும் மெச்சூரிட்டி கிளைம்
டெபாசிட் பெறுவதற்கான ஆவணங்களை
சமர்ப்பிக்கலாம் – LIC

1956-ஆம்
ஆண்டில் எல்ஐசி நிறுவப்பட்டது. அதாவது லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் பிறகு உருவாக்கப்பட்ட எல்ஐசி காப்பீடு திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். அரசு காப்பீடு
நிறுவனமான் எல்ஐசி, தனியார்
இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள்பால் வந்தாலும் இன்னமும் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளமாக
உள்ளது. வாடிக்கையாளர்கள் எல்ஐசி
மீது வைத்துள்ள நம்பிக்கை
தான் அதற்கு மிகமுக்கிய காரணம்.

இந்த
சூழலில் கொரோனா பேரிடர்
காலத்தில் பாலிசி முடிந்த
நிலையிலும் பணம் எடுக்க
முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரிதும்
சிரமப்பட்டனர். இதையடுத்து கொரோனா கட்டுக்குள் வந்ததால்
நடைமுறை சிக்கல் நீங்கியது.

தற்போது
கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் உள்ள
அனைத்து எல்ஐசி கிளைகளிலும் மெச்சூரிட்டி கிளைம்
டெபாசிட் செய்துகொள்ள அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.

அதாவது
இந்தியா முழுவதிலும் உள்ள
113
டிவிஷனல் அலுவலகங்கள், 2,048 கிளைகள்,
1,536
சேட்டிலைட் அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் மண்டலங்கள் ஆகியவற்றில் மெச்சூரிட்டி கிளைம் டெபாசிட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று
கூறியுள்ளது. நாம் எந்த
கிளையில் பாலிசி எடுத்திருந்தாலும், வேறு எந்த
கிளையிலும் மெச்சூரிட்டி கிளைம்
ஆவணங்களை சமர்ப்பித்து கொள்ளலாம்.
இதன் மூலம் கிடைக்க
வேண்டிய தொகை எளிதில்
நம்மை வந்து சேர்ந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -