HomeBlogஇடைத்தரகரை நம்ப வேண்டாம் - மதிப்பெண் அடிப்படையில்தான் நர்ஸ், சுகாதார பணியாளர்கள் நியமனங்கள்
- Advertisment -

இடைத்தரகரை நம்ப வேண்டாம் – மதிப்பெண் அடிப்படையில்தான் நர்ஸ், சுகாதார பணியாளர்கள் நியமனங்கள்

Do not trust the mediator - appointments of nurses and health workers are based on the score

இடைத்தரகரை நம்ப
வேண்டாம்மதிப்பெண் அடிப்படையில்தான் நர்ஸ், சுகாதார
பணியாளர்கள் நியமனங்கள்

தமிழகத்தில் 7,296 செவிலியர்கள், சுகாதார
பணியாளர்கள் இடங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நியமிக்கப்படுவர். 
யாரும் எந்த ஒரு
இடைத்தரகரையும் நம்ப
வேண்டாம் என்று அமைச்சர்
மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,
தேனாம்பேட்டை டி.எம்.எஸ்
வளாகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளரை சந்தித்து
பேசினார். அப்போது மக்கள்
நல்வாழ்வுத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் மற்றும்
உயர் அதிகாரிகள் பலர்
உடனிருந்தார்.

Apply Here – தேசிய சுகாதார பணி தமிழ்நாடு – ல் Mid- Level Healthcare Provider, Multipurpose Health Worker பணியிடங்கள் – 7296 Vacancies

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை
36
லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர்
மருத்துவ பயன்பெற்றுள்ளனர். மக்களை
தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு, புதிய
பணியிடங்கள் உருவாக்கப்படும்.

புதிதாக
நர்சுகள், சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி
4
ஆயிரத்து 848 செவிலியர்கள், 2 ஆயிரத்து
448
சுகாதார பணியாளர்களை பணியில்
அமர்த்திக் கொள்வதற்கான அரசாணை
நேற்று முன்தினம் வெளியிட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே
கடந்த ஒன்றரை ஆண்டு
காலமாக கொரோனா பணியில்
4
ஆயிரத்து 570 செவிலியர்கள் மற்றும்
1,646
சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு
வருகின்றனர். இவர்கள் தங்களது
பணியை நிரந்தரம் செய்ய
வேண்டும் என்று தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வந்தனர்.

அனைத்து
பணியிடங்களும் நிரந்தரம்
செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தாலும், கொரோனா
காலத்தில் அவர்கள் பணியாற்றிய காரணத்தினால் கருணை
அடிப்படையில் 20 மதிப்பெண்கள் கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள செவிலியர்கள், சுகாதார
பணியாளர் பணியிடங்கள் அந்தந்த
மாவட்ட கலெக்டர்கள் தலைமையில்
நிரப்பப்பட இருக்கிறது.

எனவே
யாரும் எந்த ஒரு
இடைத்தரகரையும் நம்ப
வேண்டாம். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான்
பணி நியமனங்கள் இருக்கும்.
எனவே புதிய 7 ஆயிரத்து
296
பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த மாவட்ட
கலெக்டர் அலுவலகம் சென்று
பார்த்தாலே போதும்.

Apply Here – தேசிய சுகாதார பணி தமிழ்நாடு – ல் Mid- Level Healthcare Provider, Multipurpose Health Worker பணியிடங்கள் – 7296 Vacancies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -