சென்னை துறைமுகத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கூறும் போலி நபர்களை
நம்பி ஏமாற வேண்டாம்
சென்னை
துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில்:
சென்னை
துறைமுகத்தில் ஆட்கள்
தேர்வு செய்யப்படுவதாகக் கூறி
சில நபர்கள் மோசடியில்
ஈடுபட்டு உள்ளனர். அதை
நம்பி பொதுமக்கள் ஏமாற
வேண்டாம் என துறைமுக
நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை
துறைமுகத்தில் சில
பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு
செய்வதாகக் கூறி, சிலர்
மோசடியில் ஈடுபட்டு வருவதாகத்
தகவல் கிடைத்துள்ளது. மேலும்,
அந்த நபர்கள் போலியான
பணியாணை கடிதத்தை அனுப்பி
பணமோசடியில் ஈடுபடுவதும் தெரிய
வந்துள்ளது.
சென்னை
துறைமுகத்தில் ஆட்களைத்
தேர்வு செய்வது உரிய
விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும். மேலும், இதுதொடர்பாக, முறைப்படி
விளம்பரம் செய்யப்படும். வேலைக்கு
ஆட்களை தேர்வு செய்வதாக
இருந்தால், அது குறித்த
விவரம் www.chennaiport.gov.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதுபோன்ற
போலி நபர்களை நம்பி
பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
மோசடி நபர்கள் குறித்து
தகவல் தெரிந்தால், துறைமுகத்தின் செயலாளர் (தொலைபேசி எண்.044-25367754),
தலைமை கண்காணிப்பு அதிகாரி
(044-25392259) ஆகியோரைத் தொடர்பு கொண்டு
பொதுமக்கள் தெரிவிக்கலாம்.