மாவட்ட அளவிலான
கலைப்போட்டி
மாவட்ட
அளவிலான, கலைப்போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், தகுதிவாய்ந்த இளைஞர்கள்
பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அரசு பண்பாட்டுத்துறையின் சார்பில்,
கலைத்துறையில் சிறந்து
விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், 17 வயது முதல் 35 வயதுக்கு
உட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட,
மாநில அளவில் கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.அதன்படி,
திருப்பூர் மாவட்ட அளவில்,
இளைஞர்களுக்கு குரலிசை,
கருவியிசை, பரதநாட்டியம் கிராமிய
நடனம் மற்றும் ஓவியம்
உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
குரலிசை
போட்டியிலும், நாதசுரம்,
வயலின், வீணை, புல்லாங்குழல், சாக்ஸா போன், கிளாரீனெட் போன்ற கருவி இசைப்போட்டியிலும், தமிழ்பாடல்கள் இசைக்கும்
தரத்தில் உள்ள இளைஞர்கள்
பங்கு பெறலாம்.இதேபோல,
தாளக் கருவிகளான தவில்
, மிருதங்கம், கஞ்சிரா, கடம்,
மோர்சிங் ஆகிய பிரிவுகளைச்சேர்ந்தவர்கள், சில தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரத
நாட்டியத்தில் முழு
மார்க்கம் நிகழ்த்தும் நிலையில்
உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
மேலும்,
கிராமிய நடனத்தில் கரகாட்டம்,
காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால்
ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், மலை மக்கள்
நடனங்கள் போன்ற பாரம்பரிய
கிராமிய நடனங்கள் அனுமதிக்கப் படும். குழுவாக பங்கேற்க
அனுமதியில்லை.ஓவியப்
போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவியத்தாள் வழங்கப்படும். ‘அக்ரலிக்‘
வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதை
பங்கேற்பாளர்கள் கொண்டு
வர வேண்டும்.தவிர,
3 மணி நேரம் அதிகபட்சமாக அனுமதிக்கப்படுவர். மாவட்ட
அளவில் ஒவ்வொரு கலைப்பிரிவுக்கும் முதல் பரிசாக
6 ஆயிரம் ரூபாய், இரண்டாவது
பரிசாக, 4,500 ரூபாய், மூன்றாவது
பரிசாக, 3,500 ரூபாய் மற்றும்
பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.பங்கேற்க விரும்புவோர், வரும்,
30ம் தேதிக்குள், 9150085001
என்ற எண்ணுக்கு பெயர்,
பிறந்த நாள், முகவரி
ஆகியவற்றை அனுப்பி பதிவு
செய்து கொள்ளலாம்.
மேலும்
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள
மண்டல உதவி இயக்குனர்,
கலை பண்பாட்டுத்துறை, அரசு
இசைக்கல்லுாரி என்ற
முகவரி மற்றும் 0422 2610290
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.