கேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்
சென்னை
ஐஐடி வளாகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயாவில் காலியாக
உள்ள இடங்களில் மாணவர்கள்
சேர்க்கப்பட உள்ளதை அடுத்து,
இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும் என்று
கேந்திரிய வித்யாலயாவின் முதல்வர்
தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஐஐடி வளாகத்தில் இயங்கி
வரும் கேந்திரிய வித்யாலயாவில் முதல் வகுப்பில் மாணவர்
சேர்க்கை நடந்து முடிந்துள்ள நிலையில், எஸ்டி பிரிவின்
கீழ் சேர்க்கப்பட வேண்டிய
இடங்களில் இன்னும் சில
இடங்கள் காலியாக உள்ளன.
அந்த இடங்களை நிரப்ப
உள்ளதால், விருப்பம் உள்ள
தகுதியான குழந்தைகளின் பெற்றோர்
தங்கள் குழந்தைகளை சேர்க்க
விண்ணப்பிக்கலாம்.
இதற்கான
விண்ணப்பங்கள் மேற்கண்ட
கேந்திரிய வித்யாலயா பள்ளியில்
இருந்து காலை 9.30 மணி
முதல் மாலை 3.30 மணி
வரை நேரில் பெற்றுக்
கொள்ளலாம்.
18ம்
தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகம் நடக்கும். இது
குறித்து கூடுதல் விவரம்
வேண்டுவோர் 7305160907 எண்ண எண்ணில்
தொடர்பு கொண்டு தெரிந்து
கொள்ளலாம்.