அரியர் மாணவர்களுக்கு நேரடி தேர்வு
பாரதியார்
பல்கலையின், 2021ம் ஆண்டு
நடத்திய இணையவழி தேர்வில்,
ஒரே ஒரு பாடத்தில்
மட்டும் தோல்வியடைந்த மாணவர்கள்,
மீண்டும் அப்பாடத்தை எழுதி
தேர்ச்சி பெற, ஓர்
வாய்ப்பு வழங்கப்படுவதாக, பல்கலை
நிர்வாகம் அறிவித்துள்ளது. இததேர்வை
மாணவர்கள் நேரடியாக, கலந்து
கொண்டு எழுத வேண்டும்.
இத்தேர்வு, செப்., 26ம்
தேதி 10:00 முதல் 1:00 மணி
வரை நடக்கும்.
2018-2019ம்
ஆண்டு சேர்ந்த, இளங்கலை
மற்றும் எம்.சி.ஏ.,
மாணவர்களுக்கும், 2019-2020ம்
ஆண்டு சேர்ந்த, முதுகலை
முது அறிவியல், முதுவணிகவியல் மாணவர்களுக்கும் பொருந்தும். விண்ணப்பங்களை, சம்மந்தப்பட்ட கல்லுாரி முதல்வரிடம் செப்.,
9ம் தேதிக்குள் அளிக்க
வேண்டும். அனைத்து இளங்கலை
கலை, வணிகவியல் தேர்வுகள்
ராமகிருஷ்ணா கலை அறிவியல்
கல்லுாரியிலும், இளம்
அறிவியல், முதுகலை, முது
அறிவியல் மற்றும் (எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
உட்பட)தேர்வுகள் என்.ஜி.பி.,
கலை அறிவியல் கல்லுாரியிலும், பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு, பல்கலையிலும் நடைபெறும்.
தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு சென்று, நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். விபரங்களுக்கு, www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.