டிஜிட்டலுக்கு மாறும் கிளை நூலகங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் விரைவில் கணினி மயமாக்கப்பட்ட உள்ளன.
தமிழகம் முழுதும் மைய நூலகங்கள் மற்றும் காலை 8.00 முதல் இரவு 8.00 மணி வரை இயங்கும் முழு நேர நூலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களை ஒட்டி இயங்கும் கிளை நூலகங்கள் இன்னும் கணினி மயமாக்கப்பட்டவில்லை. நூலகங்களுக்கும் கம்ப்யூட்டர் விநியோகிக்க நூலகத்துறை திட்டமிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் கூறியதாவது:
இணைய புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் முறையிலான பயன்பாட்டுக்கு கம்ப்யூட்டர் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக உள்ளது. இதற்காக சென்னை சி.டி.எஸ் நிறுவனம் தமிழகம் முழுதும் 4500 கம்ப்யூட்டர்களை வழங்கியுள்ளது.
வாசகர்கள் இனி எளிதாக இணைய வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இணைய வசதியை அந்தந்த நூலகங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எந்த நூலகத்தில் எந்தெந்த புத்தகங்கள் உள்ளன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
போட்டி தேர்வர்களுக்கு “ஆன்லைன்” வகுப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.