சென்னை: மாவட்ட சுகாதார மையம் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நர்ஸ்கள், தங்கள் விரும்பும் இரு மாவட்டங்களை தேர்வு செய்யலாம்,&’&’ என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.தமிழகம் முழுதும் காலியாக உள்ள, 3,949 நர்ஸ்கள் பணியிடங்களை, 38 மாவட்ட கலெக்டர்கள், நேர்முகத் தேர்வு வாயிலாக நிரப்புகின்றனர். இதில், கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்ஸ்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
அதன்படி, 20 மாதங்கள்பணியாற்றி இருந்தால், 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். அத்துடன், 40 மதிப்பெண்கள் நேர்முக தேர்வில் பெற்றால், அவர்களுக்கான பணி உறுதி செய்யப்பட்டு விடும்.இந்நிலையில், மாவட்ட சுகாதார மையம் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்களுக்கான விண்ணப்ப நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் தலைமையில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணியாற்ற விரும்பும் சொந்த மாவட்டத்தையும், அவை இல்லாவிட்டால் முன்னுரிமை அளிக்க வேண்டிய மாவட்டத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதற்கான வழிகாட்டுதல்களையும், வாய்ப்புகளையும் அளிக்குமாறு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.