TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்புசெய்திகள்
ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய
பட்டப் படிப்பு
தாட்கோ
மூலம் 12ம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெளிட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ்
2 தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்
பெற்றுத் தேர்ச்சி பெற்ற
ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சார்ந்த மாணவ,
மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பை
தாட்கோ மூலம் ஹெச்சிஎல்
நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
இந்தத்
திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதல்
ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். அடுத்த 6 மாதத்தில் சென்னை,
மதுரை, விஜயவாடா, நொய்டா,
லக்னோ மற்றும் நாக்பூா்
ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஹெச்சிஎல் நிறுவனத்தில் நேரடி
பயிற்சி அளிக்கப்படும்.
முதல்
ஆண்டில் 6 மாதம் முதல்
மாணவா்களுக்கு மேற்படி
நிறுவனத்தின் வாயிலாக
ஊக்கத்தொகையாக ரூ.10
ஆயிரம் வழங்கப்படும்.
இரண்டாம்
வருடத்தில் மாணவா்களுக்கு மூன்று
விதமான கல்லூரிகளில் தகுதியின்
அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும்.
ராஜஸ்தான்
மாநிலத்தில் உள்ள பிஐடிஎஸ்
– பிலனி பல்கலைக் கழகத்தில்,
பி.எஸ்சி (டிசைன்
மற்றும் கம்ப்பூடிங்) பாடப்பிரிவில் சோக்கப்படுவார்கள். இந்த
நான்கு ஆண்டு படிப்பினை
ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை
செய்து கொண்டே படிக்க
வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
அதே
போல தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்
கழகத்தில் மாணவா்களின் தகுதிக்கேற்ப ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் பிசிஏ மூன்று ஆண்டு
பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
உத்தர
பிரதேசம் மாநிலத்தில் உள்ள
ஏஎம்ஐடிஒய் பல்கலைக்கழகத்தில் மூன்று
ஆண்டு பிசிஏ, பிபிஏ
மற்றும் பி.காம்
பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.
இதில் தாட்கோவின் பங்களிப்பாக ஹெச்சிஎல் நிறுவனம் நடத்தும்
நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கு திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு
மாணவா்களுக்கும் பயிற்சிக்கான கட்டணத் தொகையை தாட்கோ
ஏற்கும். தேர்ச்சி பெற்ற
மாணவா்களுக்கு ஹெச்சிஎல்
நிறுவனத்திற்கு செலுத்த
வேண்டிய ரூ. 1.18 லட்சம்
கட்டணத் தொகையை முதல்
ஆறு மாதப் பயிற்சி
காலத்தில் தாட்கோ கல்வி
கடனாக வழங்கும்.
பிஐடிஎஸ்–பிஐஎல்ஏஎன்ஐ பல்கலைக்கழகத்தில் நான்கு
ஆண்டு மற்றும் சாஸ்த்ரா
மற்றும் ஏஎம்ஐடிஒய் பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டு
பட்டப்படிப்பில் சோந்தவுடன் ஹெச்சிஎல் நிறுவனத்தில் முதல்
ஆண்டு திறமைக்கு ஏற்றவாறு
ஊதிய உயா்வுடன் ஆண்டு
வருமானம் ரூ. 1.17 லட்சம்
முதல் ரூ. 2 லட்சம்
வரை வழங்கப்படும்.
மேற்படி
நிபந்தனைகளின்படி தேர்வு
செய்யப்பட்ட மாணவா்களுக்கு திறனுக்கான மூன்று பாடப் பிரிவிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னா்
இணைவழி வாயிலாக நுழைவுத்
தேர்வு நடத்தப்படும். இந்தத்
தேர்வில் மூன்று பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சமாக 10 மதிப்பெண்ணிற்கு 4 மதிப்பெண் பெற்றால் போதுமானதாகும்.
மேலும்,
இந்தத் திட்டம் தொடா்பான
விவரங்கள் மற்றும் பதிவு
செய்வதற்கு தாட்கோ இணையதள
முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow