ஒன்றாம் வகுப்பு
முதல்
எட்டாம்
வகுப்பு
வரையிலான
பள்ளி
மாணவர்களுக்கு பள்ளிகள்
திறப்பு
குறித்து
30-ம்
தேதி முடிவு
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை
உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றிய
அறிக்கை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்
சென்னையில் தமிழக பள்ளி
கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளிகள் திறப்பது குறித்து
மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகள் வேறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்றும்,
சிலர் ஒன்றாம் வகுப்பு
முதல் ஐந்தாம் வகுப்பு
வரை தொடங்கலாம் என்றும்
மற்றும் சிலர் ஒன்றாம்
வகுப்பு முதல் எட்டாம்
வகுப்பு வரை தொடங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த
நிலையில் தமிழகத்திலும் ஆறாம்
வகுப்பு முதல் எட்டாம்
வகுப்பு வரையிலான வகுப்புகளை தொடங்க தமிழக முதல்வருக்கு இன்று அறிக்கை அனுப்ப
உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு
முதல் எட்டாம் வகுப்பு
வரை உள்ள பள்ளி
மாணவர்களுக்கு பள்ளிகள்
திறப்பது பற்றிய அறிவிப்பு
இந்த மாதம் இறுதியில்
செப்டம்பர் 30-ம் தேதி
முடிவு செய்யப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.