தமிழகம் முழுவதும்
சுங்கச்சாவடி கட்டணம்
உயர்வு
இந்தியா
முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக்
மூலம் கட்டணம் செலுத்த
மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள்
நெடுநேரம் சாலைகளில் காத்திருக்க தேவையில்லை, போக்குவரத்து நெரிசல்
ஏற்படாது என்று மத்திய
அரசு தெரிவித்தது. மேலும்
சுங்கச்சாவடிகளில் இருக்கும்
ஊழியர்களுக்கும், வாகன
ஓட்டிகளுக்கும் சில்லறை
தொடர்பான பிரச்சனைகள் எதுவும்
ஏற்படாது என்றும் தெரிவித்தது.
தற்போது
அடுத்த கட்டமாக சுங்கச்சாவடி கட்டணம் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்
பெரிதும் கவலை அடைந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் நள்ளிரவு
முதல் சுங்கச்சாவடிகளில் செலுத்தப்படும் கட்டணம் உயர்த்தப்படும் என்று
தெரிவித்தனர். தமிழகம்
முழுவதும் சுமார் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண தொகையை
ரூ.5 முதல் ரூ.30
வரை உயர்த்தியுள்ளனர்.
சென்னை,
திண்டுக்கல், திருச்சி, மதுரை
உள்ளிட்ட 26 சுங்கச்சாடிகளில் இந்த
கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாம்.