சென்னையில் மீண்டும்
ஊரடங்கு
தகவல் போலியானவை –
மாநகராட்சி விளக்கம்
கொரோனா
நோய் பரவல் காரணமாக
கடந்த ஆண்டு பொது
முடக்கம் அமலுக்கு வந்தது.
பின்பு நாளடைவில் பல
தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் கடந்த ஆண்டு
இறுதியில் மக்கள் இயல்பு
வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த ஆண்டு
இறுதி முதல் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக
இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை. இதன்
எதிரொலியாக தமிழகத்தில் மீண்டும்
கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
தற்போது
கொரோனாவின் இரண்டாவது அலை
பரவி வருகிறது. ஒரு
நாளில் மட்டுமே சுமார்
3645 பேருக்கு கொரோனா தொற்று
கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவிற்கு மத்தியில்
நேற்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு கடுமையான
கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
இதனை
தொடர்ந்து தற்போது இணையத்தில் மீண்டும் பொதுமுடக்கம் என்றும்,
சில துறைகளுக்கு மட்டுமே
தளர்வுகள் என்றும் ஓர்
அறிவிப்பு புகைப்படம் வைரலாகி
வருகிறது. தற்போது இதுகுறித்து விளக்கமளித்த சென்னை
மாநகராட்சி, இந்த தகவல்
போலியானவை என்று தெரிவித்தது.
மேலும்
இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை தெரிந்துகொள்ள வேண்டுமெனில் சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கை பின்தொடர
வலியுறுத்தியுள்ளது.