HomeBlogகுறுகிய காலத்தில் நல்ல வருமானம் பெற, வெள்ளரிக்காய் சாகுபடி
- Advertisment -

குறுகிய காலத்தில் நல்ல வருமானம் பெற, வெள்ளரிக்காய் சாகுபடி

குறுகிய காலத்தில் நல்ல வருமானம் பெற, வெள்ளரிக்காய் சாகுபடி

TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)

குறுகிய காலத்தில்
நல்ல வருமானம் பெற, வெள்ளரிக்காய் சாகுபடி

பயணத்தின்
போது உடல் சூட்டை
குறைக்கவும், தாகம் தீர்க்கவும் பலரும் விரும்பி உண்பது
வெள்ளரிக்காயத்தான்.

அதனால்
வெள்ளேரிக்கு எப்போதுமே
நல்ல சந்தை வாய்ப்பு
உண்டு. வெள்ளரிக்காய் ஒரு
குறுகிய கால பயிர்
ஆகும். இதன் வயது
மூன்று மாதம் ஆகும்.
எனவே விவசாயிகள் வெள்ளரியை
சாகுபடி செய்தால் குறுகிய
காலத்தில் நல்ல வருமானம்
பெறலாம்.

ஏற்ற மண் மற்றும் மாதம்:

வெள்ளரி
ஒரு வெப்ப மண்டல
பயிராகும். குறைந்த வெப்பநிலை
கொண்ட பருவம் சாகுபடிக்கு சிறந்ததாகும். இதற்கு
தை மாதம் மிகவும்
சிறந்தது.

எல்லா
வகை மண்ணிலும் வளரும்
தன்மையுடையது. ஆனால்,
அதிக மகசூல் பெற
களிமண் மிகவும் சிறந்ததாகும்.

நிலத்தை தயார் செய்வது எப்படி?

ஒரு
ஏக்கருக்கு 20 டென் எருவைக்
கொட்டி கலைத்து, நிலத்தை
மூன்று அல்லது நான்கு
முறை நன்றாக உழவு
செய்த பின்பு, ஒன்றரை
மீட்டர் இடைவெளியில், 45 சென்டிமீட்டர் நீல அகல, ஆழத்தில்
குழிகளை வெட்ட வேண்டும்.

விதை அளவு மற்றும் விதைக்கும் முறை:

வெள்ளரி
சாகுபடி செய்ய ஒரு
ஹெக்டருக்கு இரண்டு கிலோ
விதை போதுமானது. 10 கிலோ
தொழு உரத்துடன் 100 கிராம்
கலப்பு உரமிட்டு, மேல்மண்
கலந்து விதையை ஊற்ற
வேண்டும். ஒரு குழிக்கு
நான்கு முதல் ஐந்து
விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் மேலாண்மை

விதை
ஊன்றியவுடன் குடம் வைத்து
இரண்டு நாட்களுக்கு ஒரு
முறை தண்ணீர் ஊற்ற
வேண்டும். பிறகு விதை
முளைத்து செடி வளர்ந்த
உடன் வாய்க்கால் மூலமாக
தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
செடி நன்றாக வளர்ந்த
உடன் வாரம் ஒரு
முறை நீர் பாய்ச்ச
வேண்டும்.

பராமரிப்பு:

விதைத்த
ஐந்து நாட்களில் விதை
முளைக்க தொடங்கி விடும்.
செடி முளைத்து வந்தவுடன்,
குளிக்கும் மூன்று செடி
விட்டு, செடி கலைப்பு
செய்ய வேண்டும். கொடி
வளர்ந்த உடன் குடியை
முப்பது நாட்கள் இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -