TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
பராமரிப்பு செலவு குறைவான மரவள்ளி
கிழங்கு சாகுபடி
சேமியா,
ஜவ்வரிசி, நூடுல்ஸ் போன்ற
உணவுப் பொருட்களுக்கு தேவையான
மூலப்பொருட்கள் மரவள்ளி
கிழங்கிலிருந்து கிடைக்கின்றன.
மேலும்
மாத்திரைகளின் மேற்புறம்
ஆனது மரவள்ளி கிழங்கிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச் பவுடர்
கொண்டே தயாரிக்கப்படுகிறது.
பத்து
மாத பயிரான மரவள்ளி
ஒரு பணப்பயிர். மற்ற
பயிர்களை விட பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.
எனவே இதை விவசாயிகள் பயிர் செய்தால் நல்ல
லாபம் பெறலாம்.
விதை நேர்த்தி:
மரவள்ளி
கிழங்கு அறுவடை செய்து
ஒரு வாரத்திற்குள் உள்ள
குச்சிகளை மட்டும் நடவு
செய்ய வேண்டும். நல்ல
திடமான மற்றும் காயாத
குச்சிகளை தேர்வு செய்ய
வேண்டும்.
நிலத்தை தயார் செய்யும் முறை:
நிலத்தை
மூன்று அல்லது நான்கு
முறை உழ வேண்டும்,
கடைசி உழவில் ஒரு
ஏக்கருக்கு 10 டன் தொழு
உரம் அல்லது இரண்டு
டன் மண்புழு உரம்
இடவேண்டும்.
நடவு செய்யும் முறைகள்:
உழவு
நிலத்தில் வட்டப் பாத்தி அமைத்து, அதில்
மூன்று அடிக்கு, மூன்று
அடி என்ற அளவில்
மரவள்ளிக்கரணை குச்சிகளை
செங்குத்தாக நடவு செய்ய
வேண்டும்.
சொட்டுநீர் பாசனமாக இருந்தால் கடைசி
உழவு செய்யும்போது சமமான
தப்பைக் கொண்டு மண்ணை
நிரவ வேண்டும், பின்பு
மூன்று அடிக்கு மூன்று
அடி என்ற அளவில்
குச்சிகளை நடவு செய்ய
வேண்டும்.
நிலத்தை
ஈரமாக்கி அதன் பின்
குச்சிகளை நடவு செய்ய
வேண்டும்.
நடவு
செய்யும்போதே தனியாக
ஒரு பாத்தியில் மரவள்ளி
குச்சியை நாற்று விட
வேண்டும், ஏனெனில் நடவு
செய்த பின் வளராத
குச்சிகளை ஒரு மாதத்திற்குள் மாற்ற வேண்டும், அப்போது
நாற்று விட்ட குச்சிகளை
எடுத்து வளராத குச்சிகளுக்கு பதிலாக நடவு செய்ய
வேண்டும்.
நீர் மேலாண்மை:
மற்ற
பயிர்களை விட மரவள்ளி
கிழங்கு சாகுபடிக்கு மிகவும்
குறைந்த நீரே போதுமானது.
நடவு
செய்து 10 நாட்கள் வரை
இரண்டு நாட்களுக்கு ஒரு
முறை நீர் பாய்ச்ச
வேண்டும். அதற்குப் பின்பு
வாரம் ஒரு முறை
நீர் பாய்ச்சினால் போதுமானது.
இதை
மானாவாரியாகவும் பயிரிடலாம் அல்லது நீர் பாய்ச்சும் முறையிலும் பயிரிடலாம். நீர்
பாசனத்திற்கு சொட்டு
நீர் முறையை பயன்படுத்துவதாக இருந்தால் இன்னும் குறைந்த
நீரை போதுமானது.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here